மாரியம்மன் கோயில் குருவப்ப நாயக்கர் தெருவில் எழுந்தருளியிருக்கும், அருள்மிகு கங்காள மூர்த்தி சுவாமிக்கு
அப்பர்மடத்தில், 7.5.2024, செவ்வாய்க்கிழமை மதியம் ஒரு மணியளவில், அமுது படையலும், அன்னதானமும், இரவு எட்டு மணி அளவில் பைரவர் பூஜையும் சிறப்பாக நடைபெறுகிறது. அதே வேளையில் அமுது படையல் முதல் நாளான, திங்கள் கிழமை, 6.5.2024 அன்று இரவு 9:00-மணியளவில் ஸ்ரீ ரெங்கநாத உபாத்தியார் அருளிய ஸ்ரீ சிறுதொண்டர் நாயனார்இசை, நாட்டியம், நாடகம்,முதல் பகுதியும்,7.5.2024 செவ்வாய்க்கிழமை இரவு,9:00- மணியளவில் இரண்டாம் பகுதியும் அருள்மிகு புன்னைநல்லூர் மாரியம்மன் சன்னதியின் எதிரே உள்ள நாடக மேடையில் வழக்கம்போல் நடைபெறும் என்பதனை, பரம்பரை டிரஸ்டி, உ, ரெத்தினம் பிள்ளை வகையறா,ஆர். துரைராஜன் பிள்ளை மற்றும் ஆர். சந்திரசேகரன் பிள்ளை, ஸ்ரீ சிறுதொண்டர் சிவநெறிக் கழகம் மற்றும் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் கிராமவாசிகள் இவ்வாறு தெரிவித்து கொண்டுள்ளனர். அனைவரும் வாரீர், அருளை பெறுவீர்.
செய்தியாளர் வேங்கை குணா

Comments
Post a Comment