அருள்மிகு ஸ்ரீதேவி செங்குன்றம் பராசக்தி வீரம்மாகாளி அம்மன் ஆலயத்தின் 46ஆம் ஆண்டு தீ மிதி திருவிழாவை முன்னிட்டு காவடி ஏந்தி, அலகு குத்தி வரும் பக்தர்களுக்கு
விஸ்வகர்மா நற்பணி மன்றம் சார்பில் 16 ஆம் ஆண்டு வெற்றிப் படைப்பாக 5000 பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சி எஸ்.காளியப்பன் ஆச்சாரி தலைமையில் செங்குன்றம் ஜிஎன்டி சாலை ஆந்திரா வங்கி அருகே நடைபெற்றது.
அலகு குத்தி கரகம் ஏந்தி வருகை தந்த பக்தர்களுக்கும், தீமிதி பக்தர்களுக்கும் மலர் பாதை வடிவமைத்து கிரேன் மூலம் மலர்கள் தூவி வரவேற்பளிக்கப்பட்டது.காப்பு கட்டிய பக்தர்களை அமர வைத்து மரியாதை செய்து விஸ்வகர்மா நற்பணி மன்ற நிர்வாகிகள் பார்த்திபன், விக்னேஷ், நிதிஷ், ஹரிஷ், காளிதாஸ், சங்கர், சத்யராஜ், சரண்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கினர்.
செய்தியாளர் ரஞ்சித்

Comments
Post a Comment