தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில், பாவேந்தர் பாரதிதாசன்,133 -வது பிறந்த நாளில் சொற்பொழிவு வளர்தமிழ்ப்புல கருத்தரங்க கூடத்தில்,29.4.2024 அன்று காலை 10:30 மணியளவில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழக துணைவேந்தர்,வி. திருவள்ளுவன் தலைமை தாங்கினார், மொழிபெயர்ப்பு துறைத்தலைவர், இரா.க.முருகன் வரவேற்புரை ஆற்றினார், மொழிபெயர்ப்பு துறையின் முன்னாள் தலைவர், பழனி. அரங்கசாமி "பாரதிதாசன் செய்த கவிதைப்புரட்சி" என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றியபோது அவர் பேசியதாவது: பெண்ணியம், பகுத்தறிவு, சுயமரியாதை, ஆகியவற்றில் தன் கவிதை மொழி வழியாக புரட்சி செய்தார், அவர் செய்தது அமைதிப் புரட்சியுமில்லை, ஆயுதப்புரட்சியுமில்லை, பாரதிதாசன் செய்தது சிந்தனை புரட்சி தான். உடல் உழைப்பு இல்லாத செல்வர் உலகை ஆண்டான், கடவுள் உங்கள் உள்ளத்தில் உள்ளான், மனச்சான்று தான் கடவுள், பெண்ணுரிமை தமிழச்சியின் கத்தி என்று எழுதுகிறான், பாரதிதாசன் இருபதாம் நூற்றாண்டில் தமிழ் புரட்சியாளனாகமிளிர்கிறார், என இவ்வாறு கூறினார், இந்த நிகழ்வில் மொழிபெயர்ப்புத் துறை இணை பேராசிரியர் இராஜேஷ்,பதிவாளர், சி.தியாகராஜன், வளர்த்தமிழ் புல முதன்மையர், இரா. குறிஞ்சிவேந்தன், மன்னர் சரபோஜி இனையாசிரியர், பாஸ்கரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர், நிகழ்ச்சியின் நிறைவாக நிகழ்வு இணை ஒருங்கிணைப்பாளர், சா. விஜய ராஜேஸ்வரி நன்றி கூறினார். முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களான:த. வீரமணிகண்டன், ஷேளினா சிவனேசன் இணைப்புரை வழங்கினர். இதில் பேராசிரியர்கள், கல்வியாளர்கள், மாணவ, மாணவிகள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
செய்தியாளர் குணசீலன்

Comments
Post a Comment