திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட செங்குன்றம் அடுத்த வடகரை ஊராட்சியில் இயங்கிவரும் அரசு ஆதிதிராவிட நல பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு பொது தேர்வில் மொத்தம் 40 மாணவிகள் தேர்வு எழுதினர்.
அதில் 93 சதவீதம் பெற்று 37 மாணவிகள் தேர்ச்சி பெற்று உள்ளனர்.முதல் இடம் ஜனனி 498 மதிபெண்கள், இரண்டாம் இடம் ஜீவிதா 480 மதிபெண்கள் , மூன்றாம் இடம் கோபிகா 451 மதிபெண்கள் பெற்று உள்ளனர்.பொது தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவிகளையும் வெகுவாக பாராட்டி தலைமை ஆசிரியர் வெங்கட்ரவி மற்றும் உதவி தலைமை ஆசிரியர் உள்ளிட்ட சக ஆசிரியர்கள் வாழ்த்தினர்.
செய்தியாளர் ரஞ்சித்

Comments
Post a Comment