திமுகவை வளர்த்தவர்களில் ஒருவரும், மேனாள் அமைச்சரும், ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட கழகத்தின் செயலாளருமாகவும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால் பெரியார் விருது பெற்று, மறைந்த புரவலர் அன்பில் தர்மலிங்கம் அவர்களின் 105 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு, திருச்சி கலைஞர் அறிவாலயம் அருகில் அமைந்துள்ள அன்பில் சிலைக்கு மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சரும் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்வில் மாநகர செயலாளர் மதிவாணன் முன்னிலை வாகித்தார் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் வண்ணை அரங்கநாதன், சேகரன், செங்குட்டுவன், மூக்கன், லீலாவேலு பகுதி கழகச் செயலாளர்கள் மோகன், நீலமேகம் தர்மராஜ், ராஜ்முஹம்மது, மணிவேல், விஜயகுமார், சிவக்குமார் மாநில, மாவட்ட, மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளை கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட பிரதிநிதிகள் மாவட்ட, ஒன்றிய, பகுதி, நகர, பேரூர், மாவட்ட - மாநகர அணிகளின் அமைப்பாளர்கள், மற்றும் உள்ளாட்சி பிரிதிநிதிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
செய்தியாளர் ஜேம்ஸ் ரவி

Comments
Post a Comment