கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த நகர் கிராமத்தில் கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்தியா கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து மாவட்ட கவுன்சிலர் நகர் சி. சக்தி வினாயகம் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவர் நகர் பெரியசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன், விசிக நல்லூர் ஒன்றிய துணைச் செயலாளர் முத்துக் கருப்பன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்ட செயலாளர் பொன் சோமு, திமுக கிளைச் செயலாளர்கள் முருகேசன், தாவுத் கனி, விஜயகுமார் மற்றும் கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கை சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
செய்தியாளர் விஜய்

Comments
Post a Comment