திருவள்ளூர் மாவட்டம் ஆரணியில் தேமுதிக திருவள்ளூர் பாராளுமன்ற வேட்பாளர் நல்லதம்பியை ஆதரித்து புரட்சி பாரதம் கட்சித் தலைவர் ஜெகன் மூர்த்தி முரசு சின்னத்திற்கு வாக்கு சேகரித்து பிரச்சாரம் மேற்கொண்டு பேசுகையில்..
தமிழகத்தில் கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது விலைவாசி உயர்ந்து வருகிறது தங்கத்தின் விலைத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது ஒரு லட்ச ரூபாயை விரைவில் தொடும் என்றும் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலையை குறைப்பது போன்று குறைத்து விட்டு மீண்டும் தேர்தல் முடிந்தவுடன் இரண்டு மடங்கு அதிகமாகிவிடும் என்றும் திருவள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் தொகுதிக்கு எந்த திட்டங்களையும் செய்யவில்லை அவரை எங்கும் பார்த்ததில்லை என்றும்
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை, லாக்கப் மரணங்கள் அதிகரித்து வருகிறது என்றும் மது ஆறாக ஓடிக்கொண்டிருக்கிறது கஞ்சா அதிகரித்து பள்ளி கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
திமுக அரசு நல்ல திட்டங்களை நிறுத்திவிட்டது என்றும் அம்மா மருந்தகம் அம்மா உணவகம் தாலிக்கு தங்கம் உள்ளிட்ட அனைத்தும் மீண்டும் தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைத்து அந்த திட்டங்களை செயல்படுத்துவோம் என்றும் இரட்டை வேடம் போடும் திமுகவை நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
தேர்தல் பிரச்சாரத்தில் பொன்னேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பலராமன் பொன் ராஜா திருவள்ளூர் அதிமுக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் வேணுகோபால் ராகேஷ் புரட்சி பாரதம் கட்சி மாவட்டத் தலைவர் ராஜா தேமுதிக மாவட்ட கழக செயலாளர் கே எம் டில்லி நகர செயலாளர் ஜெகதீசன் தயாளன் குணபூபதி பானு பிரசாத் முத்துக்குமார் செல்வகுமார் பொன்னேரி யுவராஜ் உள்ளிட்ட கூட்டணி கட்சி முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் ராதாகிருஷ்ணன்

Comments
Post a Comment