Skip to main content

திருவள்ளூரில் போலீஸ் பாதுகாப்புடன் இ வி எம் இயந்திரங்கள் வாக்கு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது..

 பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளதை ஒட்டி பொன்னேரி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 311 வாக்கு மையங்களுக்கு பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுவதை விட்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்களில் ஏற்று அனுப்பி வைக்கும் பணி மீன்வள பல்கலைக்கழக மீன்வளகல்லூரியில் நடைபெற்றது.

 மாவட்டம் முழுவதும் பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதை ஒட்டி வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணிகள் கும்மிடிப்பூண்டியால் 330 வாக்குப்பதிவு மையங்கள்  மாதவரம் 475 வாக்குப்பதிவு மையங்கள் திருவள்ளூர் 296 வாக்குப்பதிவு மையம் பூவிருந்தவல்லி 395 வாக்கு பதிவு மையம் ஆவடி449  வாக்குப்பதிவு மையம் என மொத்தமாக 6 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 2256 வாக்கு  மையங்களுக்கு தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் வாகனம் மூலம் இவிஎம் மின்னணு வாக்கு இயந்திரம் விவி பேட் கருப்பு மை தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் அனுப்பி வைக்கும் பணிகள் நடைபெற்றநிலையில் பொன்னேரி சட்டமன்றத் தொகுதியில் வாக்குப்பதிவு மையங்களில் பணியாற்றும் அனைவரும் வாட்சப் குழுக்களை  உருவாக்கி அதில் இணைந்து  பணியாற்றவும் எந்த பிரச்சனையும் ஏற்படாமல் அனைவரும் அதில் தகவல் அளிக்க வேண்டும், சிறப்பாக தேர்தலை நடத்த அரசு அலுவலர்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், உடனுக்குடன் தேவையான தகவல்களை பெற வேண்டும் என  தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு  பொன்னேரி சார் ஆட்சியர் வாகே சங்கேத் பல்வந்த் ஆலோசனைகளை வழங்கினார் .இதில் பொன்னேரி வட்டாட்சியர் மதிவாணன் உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.


செய்தியாளர் ராதாகிருஷ்ணன் 

Comments