Skip to main content

தேமுதிக வேட்பாளருக்கு முரசு சின்னத்திற்கு வாக்குகளை கேட்டு இருசக்கர வாகன மூலம் இறுதி கட்ட பிரச்சாரம்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் திருவள்ளூர் பாராளுமன்ற தேமுதிக வேட்பாளர் கு. நல்லதம்பிக்கு முரசு சின்னத்திற்கு இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று இறுதி கட்டமாக முக்கிய சாலைகள் வழியாக சென்று தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர்.

இதில் பொன்னேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பலராமன் ராகேஷ் முத்துக்குமார்  செல்வகுமார் சங்கர் யுவராஜ்  தனஞ்செயன் வாசகர் ராமதாஸ்  உள்ளிட்ட தேமுதிக அதிமுக முக்கிய கூட்டணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கட்சிக் கொடிகளை கட்டிக் கொண்டும் முர சின்னத்தை கைகளில் ஏந்தியும் துண்டு பிரசுரங்களை வழங்கியும் பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்தனர்.

செய்தியாளர் ராதாகிருஷ்ணன் 

Comments