Skip to main content

காங்கிரஸ் வேட்பாளருக்கு செங்குன்றம் பேரூர் திமுக சார்பில் தீவிர வாக்கு சேகரிப்பு.!

சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளரும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமான மாதவரம் எஸ்.சுதர்சனம் ஆணைக்கிணங்க செங்குன்றம் பேரூர் திமுக சார்பில் திருவள்ளூர் நாடாளுமன்ற இன்டியா கூட்டணி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து செங்குன்றம் பேரூராட்சிக்குட்பட்ட 2, 3 மற்றும் 4வது வார்டுகளில் கை சின்னத்திற்கு வாக்குகள் சேகரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 

இதில் செங்குன்றம் பேரூர் கழக திமுக, மாவட்ட, ஒன்றிய, மாவட்ட, பேரூர் வார்டு, மகளிர் அணி, இளைஞர் அணி, மாணவர் அணி உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டு வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி கை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தனர்.இதில் ஏராளமான கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் ரஞ்சித் 

Comments