Skip to main content

நாகை மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் எஸ்.ஜி.எம். ரமேஷ் கிராமபுறங்களில் தீவிர வாக்கு சேகரிப்பு..

தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 ம் தேதி ஒரே கட்டமாக நடைப்பெற உள்ளது. நாகை மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளராக எஸ்.ஜி.எம் ரமேஷ் போட்டியிடுகிறார். கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.

கீழ்வேளூர் ஒன்றிய தலைவர் நிஜந்தன் தலைமையில் செருநல்லூர், குருமனாங்குடி, குருக்கத்தி, கூத்தூர், கீழ்வேளூர், தேவூர் உள்ளிட்ட பல்வேறு கிராமப்புற பகுதிகளில் கூட்டணி கட்சியினர் இருச்சக்கர வாகனத்தில் பேரணியாக செல்ல வேட்பாளர் திறத்தவெளி வாகனத்தில் சென்று தாமரை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். அவருக்கு கூட்டணி கட்சியினர் மாலை அணிவித்தும் பெண்கள் ஆரத்தி எடுத்தும் வரவேற்றனர். இதில் பாஜக மாவட்ட தலைவர் கார்த்திகேயன், மாவட்டச் செயலாளர் ஜோதிபாசு, மாவட்ட செயற்க்குழு உறுப்பினர் கந்தசாமி, ஒன்றிய பொதுச் செயலாளர் விநாயக மூர்த்தி, தமிழக மக்கள் முன்னேற்றம் ஒன்றிய செயலாளர் சிலம்பரசன், அமமுக ஒன்றிய செயலாளர்கள் பிரசாந்த், ஜெயவேலு,  உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்துக் கொண்டனர்

செய்தியாளர் லெனின்

Comments