கடலூர் மாவட்டம் வேப்பூர் கூட் ரோட்டில், வணிக வளாகங்கள், மருந்தகங்கள், உணவகங்கள், மற்றும் பேருந்துக்காக காத்திருக்கும் பொதுமக்களிடம் இயக்குனர் தங்கர்பச்சானை ஆதரித்து கூட்டணி கட்சி நிர்வாகிகள் இறுதி கட்ட தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்தியா முழுவதும் முதற்கட்ட தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் நேற்று வேப்பூரில், இந்திய ஜனநாயக கூட்டணியின் கடலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் இயக்குனர் தங்கர்பச்சானை ஆதரித்து வன்னியர் சங்க மாவட்ட தலைவர் சிங்காரவேலன் முன்னிலையில் பாஜக ஒன்றிய தலைவர் கந்தன், பாமக ஒன்றிய செயலாளர்கள் கமலி வேல்முருகன், மணிமாறன், இளையராஜா மற்றும் ஓபிஎஸ் அணி ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், தமிழ் மாநில காங்கிரஸ் வட்டாரத் தலைவர் துளசி உள்ளிட்ட கூட்டணி கட்சியின் நிர்வாகிகளுடன் கடைக்கடையாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கி மாம்பழம் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டி இறுதிக்கட்ட தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, இந்திய ஜனநாயக கூட்டணியின் கட்சியின் நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.
செய்தியாளர் விஜய்

Comments
Post a Comment