தேனி மாவட்டம் கூடலூர் அருகே பளியன்குடியில் கொடியேற்ற நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது. விழாவில் மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை செயலாளர் ராஜகணேசன் பொருளாளர் முருகன் விழா கொடியை ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார்கள்.
அறக்கட்டளை கெளரவ தலைவர்கள் ஜெயபாண்டியன், நேரு தலைமை ஏற்றனர். சிறப்பு விருந்தினராக தேனி மாவட்ட வாணியர் சங்க தலைவர் சுந்தர வடிவேல், மற்றும் கேரள கண்ணகி அறக்கட்டளை தலைவர் சுரேஸ், விருதுநகர், தேனி நகர் சங்கத்தினரும், பரதநாட்டிய மாஸ்டர் காவியா குழுவினர் கண்ணகி வாழ்த்து நாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்றது.
முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தர்கள். விழாவில் அறக்கட்டளை நிர்வாகிகள் கருத்தகண்ணன்,பஞ்சுராஜா, சரவணன், காசிராஜன், தனிக்கொடி,சேரலாதன், சபரிநாதன், சுதாகர், சிவா, கருப்பசாமி, அய்யப்பன், சிபி, கேசவன், விஷ்ணு மகளிர் குழு தலைவி சாந்திசேகர் தலைமையில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.மேலும் 23ம் ஒரு நாள் நடைபெரும் சித்ரா பவுணர்மி விழாவிற்கு வருகை தரும் பக்த்தர்கள் அனைவருக்கும் அன்ன தானம் வழங்குவதற்கான செலவினத்திற்கு தமிழக அரசு 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கி உள்ளது.
செய்தியாளர் விஜயலிங்கராஜா

Comments
Post a Comment