Skip to main content

செங்குன்றத்தில் நாம் தமிழர் கட்சி நாடாளுமன்ற வேட்பாளர் தேர்தல் பிரச்சாரம்

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மாதவரம் தொகுதி நாம் தமிழர் கட்சி  சார்பில் திருவள்ளூர்  நாடாளுமன்ற  வேட்பாளர் ஜெகதீஷ் சந்தர்  அறிமுகக் கூட்டம் செங்குன்றம் அண்ணா பேருந்து நிலையம் அருகே திருவள்ளூர் மண்டல செயலாளர் வழக்கறிஞர் இரா.ஏழுமலை தலைமையில் நடைபெற்றது. 


நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும் செங்குன்றம் நகர செயலாளருமான இராவணன் (எ) வே.இளையராஜா, கோயில்ராஜ், சிவசங்கர், ஜீவரத்தினம், சகாபுதீன், விமல்ராஜ் ஆகியோர்  முன்னிலை வகித்தனர்.

துருவன் செல்வமணி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு நாம் தமிழர் கட்சி சார்பில் திருவள்ளூர் நாடாளுமன்ற வேட்பாளராக போட்டியிடும் ஜெகதீஷ் சந்தரை அறிமுகப்படுத்தி ஒலிவாங்கி என்னும் மைக் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து  சிறப்புரையாற்றினர். 

இதில் இடிமுரசு, சித்ராதேவி, சிவகாமி, மாரியப்பன், தமிழ்பிரபு, கன்னியப்பன், பன்னீர்செல்வம், ஸ்ரீதர், புலிவேந்தன், சேர்மக்கனி, நீலாசுரேஷ், சக்திவேல், ஜெகதீஷ்  உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

செய்தியாளர் ரஞ்சித்

Comments