Skip to main content

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜான்சிராணி ஜெயங்கொண்டம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பு

 அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இலையூர், வாரியங்காவல், இளமங்கலம், உடையார்பாளையம், மூர்த்தியான், துளாரங்குறிச்சி, சூசையர் பட்டினம், ஜெயங்கொண்டம், ஆயுதகளம், பூவாயிகுளம்,  குருவாலப்பர்கோவில், சின்ன வளையம், இளையபெருமாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜான்சிராணி திறந்த வேனில் நின்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 


அப்போது, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்  தேர்தல் அறிக்கையில் வெளியிட்டுள்ள அனைத்து திட்டங்களும் இப்பகுதி மக்களுக்கு கொண்டு வருவேன். மேலும், இப்பகுதி மக்களுக்கு தேவையான சாலை, குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்வேன் என வாக்குறுதி அளித்து வாக்கு சேகரித்தார்.வாக்கு சேகரிப்பின் போது, அக்கட்சியின் மண்டலச் செயலாளர் நீலமகாலிங்கம், மாவட்டச் செயலாளர் பிரபாகரன், தொகுதிச் செயலாளர் டேவிட், முன்னாள் மாவட்ட தலைவர் எஸ்.சரவணன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஹேமலதா உட்பட கட்சி நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.

செய்தியாளர் பாலு 


Comments