பாமக வேட்பாளர் திலகபாமா.. அனுமதி இன்றி செயல்பட்ட மதுபான கூட்டத்திற்குள் புகுந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு..!
திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர் திலகபாமா போட்டியிடுகிறார்.இதற்கிடையே தேர்தல் பரப்புரை இன்றுடன் நிறைவு பெற உள்ளதால் அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் திண்டுக்கல் பைபாஸ் சாலையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் திடீரென அந்தப் பகுதியில் அனுமதி இன்றி செயல்பட்டு வந்த மதுபான கூட்டத்திற்குள் நுழைந்து அங்கு கள்ளத்தனமாக நடைபெற்றுக் கொண்டிருந்த விற்பனையை தடுத்து நிறுத்தினார்.மேலும் அந்த அனுமதி இல்லாத மதுபான கூட வாயில் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் தற்பொழுது ஈடுபட்டு வருகிறார். காவல்துறையினர் அந்த பகுதிக்கு வராமல் தர்ணா போராட்டத்தை கைவிட போவதில்லை என வேட்பாளர் திலகபாமா தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அந்த பகுதியில் தற்போது பரபரப்பு நிலவி வருகிறது.
செய்தியாளர் சதிஷ் ரங்கநாதன்

Comments
Post a Comment