Skip to main content

செங்குன்றத்தில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் வாக்கு சேகரிப்பு

பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் திருவள்ளூர்  தொகுதி பாராமன்ற வேட்பாளர் வழக்கறிஞர் டி.தமிழ்மதியை ஆதரித்து யானை சின்னத்தில் வாக்கு சேகரிக்கும் நிகழ்ச்சி செங்குன்றம் அடுத்த தீர்த்தக்கிரியம்பட்டு ஊராட்சியில் தொடங்கி செங்குன்றம், பம்மதுகுளம், பொத்தூர், வெள்ளானூர் ஊராட்சிகளில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டத் தலைவர் வெள்ளானூர் வி.கே. வெங்கட் தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாடு மாநில தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங் ஆகியேர் சிறப்பு அழைப்ளபாளராக கலந்துகொண்டு திருவள்ளூர்  பாராளுமன்றம் வேட்பாளர் வழக்கறிஞர் டி.தமிழ்மதியை ஆதரித்து  வாக்குகள் சேகரித்தார்.இதில் மாவட்டத் துணைத்தலைவர் வடகரை நா.ஜானகிராமன், பொத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் சுரேஷ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பகுஜன் பிரதீப் உள்ளிட்ட மாவட்ட, தொகுதி, ஒன்றிய, நகர, செக்டார், பூத், கிளைக் கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

செய்தியாளர் ரஞ்சித் 

Comments