Skip to main content

நத்தம் அருகே குட்டூரில் அருள்மிகு உண்ணாமுலை அம்பாள் உடனுறை அண்ணாமலையார் திருக்கோவில் கும்பாபிஷேக விழா

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் புன்னப்பட்டி கிராமம் குட்டூரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள அருள்மிகு உண்ணாமுலை அம்பாள் உடனுறை அண்ணாமலையார் திருக்கோயில் நூதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா  நடந்தது. வெள்ளிக்கிழமை காலை மங்கள இசை, திருமறை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், தனி பூஜை, வாஸ்து சாந்தி, திக் பந்தனம், பிரவேச பலி, விருச்சகிரணம், அங்குரார்பணம், ரக்ஷா பந்தனம், முதற்கால யாகபுஷால பூஜை ,வேத பாராயணம், திருவியாகுதி, மூல மந்திரஹோமம் நடத்தப்பட்டது. அதை தொடர்ந்து பூர்ணாகுதி  தீபாராதணை சதுர்வேதம் திருமறை ஆசிர்வாதம் சுவாமி எந்திர பிரதிஷ்டை நடைபெற்றது. இன்று காலை விக்னேஸ்வர பூஜை, புண்ணிய யாகவாசனம், மண்டப சாந்தி, பிம்ப சுத்தி, லட்சுமி பூஜை, கோ பூஜை, நான்காம் கால யாக பூஜை, வேதபாராயணம், திரவியா குதி, மூல மந்திர ஹோமம்,  நாடி சந்தானம், ஷ்பர்ஷாகுதி உள்ளிட்ட பூஜைகளும் மகாபூர்ணாகுதி, தீபாராதனை, சதுர்வேதம், ஆசீர்வாதம், யாத்ராதானம், கடம்வலம் வந்த பிறகு கலசங்களுக்கு பூஜைகள் நடந்தது.

தீபாராதனையை தொடர்ந்து  மேளதாளம் முழங்க ஏற்கனவே யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த அய்யனார் அருவி, அழகர்மலை, கரந்த மலை, காசி, ராமேசுவரம், வைகை, உள்ளிட்ட பல்வேறு புனித ஸ்தலங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித தீர்த்த குடங்கள் ஊர்வலமாக கோபுர உச்சிக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க புனித தீர்த்தம் குடம் குடமாக ஊற்றப்பட்டு பூஜைகளும், தீபாராதனைகளும் நடந்தது. இதில் கோவிலை சுற்றி ஏராளமான பக்தர்கள் நின்று கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அப்போது வானத்தில் கருடன்கள் வட்டமிட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு பூஜை மலர்களும்,புனித தீர்த்தமும்,அறுசுவை உணவு அன்னதானமும் வழங்கப்பட்டது.


செய்தியாளர் சதீஷ் ரங்கநாதன் 

Comments