செங்குன்றம் அருகே பாலவாயல் அடுத்த சோத்துப்பாக்கம் ஜெயதுர்கா நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் திருக்கோவிலில் ஸ்ரீ ராம நவமியை முன்னிட்டு ஸ்ரீ சீதா ராம திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
ஆலயத்தில் காலை முதல் புண்ணியாகசனம் சங்கல்பம் கலச ஆவாஹனம் ஸ்ரீ பஞ்ச சுத்த ஹோமம் நடைபெற்று, ராமர் உற்சவர் திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் சீதாராமருக்கு அலங்கார ஆராதனைகள் நடைபெற்று, மாலை வேளையில் விஷ்ணு சகஸ்ரநாமம் நடைபெற்று ஸ்ரீ சீதாராம திருக்கல்யாண வைபோகம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் செங்குன்றம் சுற்று வட்டார பகுதி மக்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சீதாராம திருக்கல்யாணத்தை கண்டுகளித்து சாமி தரிசனம் செய்தனர்.
இதில் ஆலய நிர்வாகிகள் டி.சரவணன், ஆர்.சுரேஷ், ஆர்.ரஜினிகாந்த், எஸ்.பிரபு வெங்கடேஸ்வரா, பி.லதா பிரபு, எஸ்.பாலாஜி ஜெ.பாபு, ஆலய அர்ச்சகர் கே.ஆர்.ஆனந்த நாராயணன் உள்ளிட்ட ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் அறக்கட்டளை மற்றும் ஊர் பொதுமக்கள் விழாவினை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.விழாவின் முடிவில் அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது. இரவில், பாடகர் முருகேஷ் வழங்கும் வாய்ஸ் ஆப் சென்னை சிட்டி குழுவினரின் பக்தி இன்னிசை நிகழ்ச்சியும் ஆலயத்தின் சார்பில் நடைபெற்றது.
செய்தியாளர் ரஞ்சித்

Comments
Post a Comment