Skip to main content

செங்குன்றம் காந்தி நகரில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி சோழவரம் போலீசார் துணை ராணுவத்தினருடன் கொடி அணிவகுப்பு.!

18வது நாடாளுமன்றத்திற்கான தேர்தல் தமிழ்நாட்டில்  வரும் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.இதற்காக வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பொது மக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என்பதற்காக துணை ராணுவத்தினர் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட சோழவரம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் சோழவரம் போலீசார் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பை செங்குன்றம் அடுத்த ஆட்டந்தாங்கல், சோலையம்மன் நகர், காந்தி நகர் திருவள்ளூர் நெடுஞ்சாலை அம்பேத்கர் நகர் மேம்பாலம் காந்திநகர் பகுதியின் முக்கிய சாலைகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் துணை ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

மக்கள் யாருக்கும் பயப்படாமல் அச்சமின்றி தங்களுடைய ஜனநாயக கடமையையாற்றிட வேண்டும் என்பதை வலியறுத்தும் விதமாகவும், அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடுவோரை கைது செய்ய துப்பாக்கி ஏந்திய போலீசார் பணியில் உள்ளதை வெளிப்படுத்தும் விதமாகவும் இந்த கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது. மேலும் ரவுடியிச செயல்களில் ஈடுபட நினைப்பவர்களுக்கு எச்சரிக்கை கொடுக்கும் விதமாகவும் இந்த கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது. இந்த அணிவகுப்பில் சோழவரம் காவல் நிலைய ஆய்வாளர்கள் ராஜ்குமார் , மனோகரன், உதவி ஆய்வாளர்கள் முபாரக், விஜயகுமார் மற்றும் போலீசார் துணை ராணுவத்தினர் பங்கேற்றனர்.

செய்தியாளர் ரஞ்சித் 

Comments