திருவள்ளூர் நாடாளுமன்ற தனி தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணியின் பாஜக வேட்பாளர் பொன்.வி.பாலகணபதி புழல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தீர்த்த கரையம்பட்டு, புள்ளிலைன், வடகரை, கிரான்ட் லைன், அழிஞ்சிவாக்கம், விளாங்காடு பாக்கம், சென்றம்பாக்கம் உள்ளிட்ட ஏழு ஊராட்சிகளில் தாமரை சின்னத்துக்கு, அம்மா மக்கள் முன்னேற்ற கழக புழல் ஒன்றிய கழக செயலாளர் ஆர்.வி. மகேந்திரன் மகேஷ் தலைமையில் வாக்குகள் சேகரிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
வாக்கு சேகரிப்பின் போது திருவள்ளூர் நாடாளுமன்ற வேட்பாளர் பாலகணபதிக்கு புழல் ஒன்றிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. தீர்த்தகரையம்பட்டு ஊராட்சியில் புழல் ஒன்றிய கழக செயலாளர் ஆர்.வி மகேந்திரன் மகேஷ் ஆள் உயர மாலை அணிவித்தும் சால்வை அனிவித்தும் மரியாதை செய்தார்.
அதனைத் தொடர்ந்து வடகரை ஊராட்சியில் ஊராட்சி கழக செயலாளர் கார்த்திக், அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில் ஊராட்சி கழக செயலாளர் பிரவீன் குமார், புழல் ஒன்றிய கழகத் துணைச் செயலாளர் கோபிநாத் மற்றும் ஐஜேகே கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் ரவீந்திரன், பாரதிய ஜனதா கட்சி சார்பில் தீர்த்தகரையம்பட்டு ஓய்வு பெற்ற முன்னாள் காவலர் ஏழுமலை, ஆகியோர் மாலை அணிவித்தும், சால்வை அனிவித்தும் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இதில் கூட்டணி கட்சிகளான பாஜக, பாமக, அமுமுக, ஐஜேகே ஆகிய கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.
செய்தியாளர் ரஞ்சித்

Comments
Post a Comment