செய்யாறில் மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை பேராவலத்தை கண்டித்து கிருத்துவ சமூக நீதி பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகா அலுவலகம் எதிரில் நேற்று நடந்த கண்டன ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக்கு பாஸ்டர் எரேமியா தானியேல் தலைமை தாங்கினார்.
பாஸ்டர்கள் கிருபாகரன், நெகேமியா, பாக்கியநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விடுதலை சிறுத்தை கட்சி நகர செயலாளர் சாண்டில்யன் வரவேற்றார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்னாள் மாவட்ட செயலாளர் மா.கு.பாஸ்கரன், தொகுதி செயலாளர் ஏ.குப்பன், மண்டல துணை செயலாளர் மேத்தா ரமேஷ், வேதாச்சலம், பன்னீர்செல்வம், மரியதாஸ், சக்கரவர்த்தி, இமானுவேல், டேவிட் ராஜ், ஜேக்கப் ஆகியோர் மணிப்பூர் பேராவலத்தை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்யாறு, வந்தவாசி, ஆரணி பகுதிகளைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் அம்பேத்கர், நாகவளவன், காளிமுத்து, சத்தியமூர்த்தி, ஞானசேகரன், சுதாகர், வெங்கடேசன், ராமு, மேனகா, உண்ணாமலை, ஏழுமலை, அருள், அன்பரசு, பொன்னுரங்கம், ரமேஷ், அருண் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வாசுதேவன்

Comments
Post a Comment