Skip to main content

சென்னை வியாசர்பாடியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூன்று பெண்கள் கைது..!

சென்னை வியாசர்பாடியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூன்று பெண்கள் கைது. கஞ்சாவை பறிமுதல் செய்து வியாசர்பாடி போலீசார் நடவடிக்கை..




சென்னை வியாசர்பாடி கல்யாணபுரத்தில் வீட்டில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு பெண்கள் மூலமாக சில்லறை முறையில் விற்பனை செய்யப்படுவதாக வியாசர்பாடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனை அடுத்து வியாசர்பாடி போலீசார் நேற்று மாலை வியாசர்பாடி கல்யாணபுரம் அருகே வாகன சோதனைக்காக நின்று கொண்டிருந்தனர் அப்போது சந்தேகத்திற்கு இடமாக நடந்து வந்த மூன்று பெண்களை வழிமறித்து காவல் துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர் இந்த விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின்னான தகவல்களை தெரிவிக்கவே 

மகளிர் போலீசார் உதவியுடன் அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தனர் விசாரணையில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த விநாயகி, கவிதா, விஜயா என்பதும் அவர்கள் மறைத்து எடுத்து வந்திருந்த பொட்டலங்களை சோதனை செய்த போது அது போதைக்கு பயன்படுத்தப்படும் கஞ்சா பொருள் என தெரியவந்தது.

இதனை அடுத்து அவர்களிடம் மேல்விசாரணை செய்த போது அவர்கள் வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்து அதனை சில்லறை முறையில் வாடிக்கையாளர்கள் செல்போனில் தொடர்பு கொண்டால் அவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்று அதனை விற்பனை செய்து வந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. 

இதனை அடுத்து அவரது வீடுகளில் சோதனை செய்த போலீசார் வீட்டில் இருந்து சுமார் மூன்று கிலோவுக்கும் மேற்பட்ட கஞ்சா பொருளை கைப்பற்றி பறிமுதல் செய்தனர்  இதனை அடுத்து அவர்கள் மூன்று பேர் மீதும் போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.


செய்தியாளர் கார்த்திகேயன்


Comments