திருப்பத்தூர் மாவட்டம். வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தாசில்தாராக இருப்பவர் ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த என்.சம்பத் இவர் சோளிங்கர் சொந்த ஊரிலே வருவாய் ஆய்வாளராகவும், வாலாஜா வட்டாட்சியர் அலுவலகத்தில் மண்டல துணை வட்டாட்சியராகவும், தனது சொந்த மாவட்டத்திலே வருவாய் துறையில் பல்வேறு பிரிவினின் கீழ் பணியாற்றியுள்ளார்.
இவர் பணியாற்றும் இடங்களில் எல்லாம் கரன்சி கலெக்ஷனில் பேர் போனவராம். கரன்சி மழையில் நனையும் என்ற பெயரும் இவருக்கு லஞ்சம் வாங்கி கொடுக்கும் புரோக்கர்களால் வழங்கப்பட்டுள்ளதாக வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் பேசப்படுகிறது. வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு உட்பட்ட பட்டா மாறுதல் செய்ய, பட்டா வழங்க, வாரிசு சான்றிதழ் வழங்க, புறம்போக்கு குடியிருப்புப் பகுதிகளில் மின் இணைப்புக்கு சான்றிதழ் வழங்க என சான்றிதழுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு சான்றிதழும் புரோக்கர்கள் அல்லது கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் மூலம் தாசில்தார் என்.சம்பத் லஞ்சம் வாங்கி வருவதாக கூறப்படுகிறது. மேலும் வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாள்தோறும் மாட்டு வண்டிகளிலும், டிராக்டர் மூலமாக இரவு நேரங்களில் பாலாற்றில் மணல் கனிமவளங்களை சுருட்டுப்பவர்களிடமிருந்து மாட்டு வண்டியில் மணல் கனிமவளங்களை கொள்ளையடிக்கும் சிலர் மூலமாக தாசில்தார் என்.சம்பத் கரன்சி கலெக்சன் செய்து வருகிறாராம். இவர் வாணியம்பாடி தாசில்தாராக வந்து ஓராண்டு நிறைவடைந்தும் இன்னும் பணியிடம் மாற்றப்படவில்லையாம் காரணம் இவர் வாங்கும் கரன்சி கலெக்ஷனில் மாவட்ட மேல் மட்ட அதிகாரிகள் முதல் மந்திரிகள் வரை கரன்சி பாய்கிறதாம் என்கின்றனர்.
வாணியம்பாடி வட்டாட்சியர் ஊழியர் வட்டாரங்கள். இவர் தாசில்தாராக வந்த பிறகு வழக்கத்தை விட கரன்சியை அதிகமாக வசூலிப்பதாக கூறப்படுகிறது, எந்த வேலை செய்ய வேண்டும் என்றாலும் பணம் கொடுத்தால் மட்டும் பணி உடனே நடக்கிறது தொலைபேசியிலேயே அனைத்து செட்டில் மட்டும் நடக்கிறதாம் தேர்தல் நேரத்தில் பணியாற்றிய தலைமை ஆசிரியர்கள் மற்றும் பி.எல்.ஓக்களுக்கு வழங்க வேண்டிய பணத்தையும் கையாடல் செய்ததாக இவர் மீது மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டுள்ளனர். இது மட்டுமின்றி வட்டாட்சியர் அலுவலகத்தில் டியூப்லைட், மாற்றியதாக ஒயரிங் சரி செய்ததாக, துடைப்பம். வாங்கியதாக பீச்சிங் பவுடர் தெளித்ததாக என போலி பில் போட்டு ஒரு லட்சத்திற்கும் மேல் கையாடல் செய்ததாக தனது அலுவலகத்தில் பணிபுரியும் துணை வட்டாட்சியர் என்றும் கூறப்படுகிறது.
மேலும் வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு உட்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் தாசில்தார் என்.சம்பத்துக்கு சேர்த்து கரன்சி வசூலித்து வருவதாக வட்டாட்சியர் வெளிப்புறம் உள்ள சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கூறுகின்றனர், தாசில்தார் என்.சம்பத் சாமானிய மக்களின் வரிப்பணத்தில் வாங்கும் சம்பளத்திற்கு வேலை செய்கிறார் ஆனால் சிறு சிறு பணிகளுக்கு எல்லாம் பத்திரிக்கைகளில் போட்டோ கொடுத்து விளம்பரம் தேடுவது தாசில்தார் என்.சம்பத்தின் வாடிக்கையாக உள்ளது.
மேலும் தாசில்தார் செய்யும் ஊழல்கள் தில்லுமுல்லு வேலைகள் பற்றிய தகவல் வெளியே கசிந்திட கூடாது என்பதற்காக குறிப்பிட்ட பத்திரிகையாளர்களுக்கு அவ்வப்போது மாதம் மாதம் இவர் லஞ்சமாக வாங்கும் கரன்சியை கொடுப்பதால் இவரை பொறுத்தவரை அரசியல்வாதிகளையை மிஞ்சி விடுவாராம். மேலும் தாசில்தார் என்.சம்பத்தை பொறுத்தவரையில் தாசில்தார் சீட்டில் உட்கார்ந்து எப்பொழுதும் வேலை பார்க்க மாட்டாராம் மேலும் இவருக்கு தற்போது உள்ள திமுக ஆட்சியில் மந்திரி ஒருவரின் சிபாரிசு உள்ளதாக தகவல்களும் வெளியாகி உள்ளது. இவர் செய்கின்ற வேலை எம்.எல்.ஏ மந்திரி முதல் மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட வருவாய் அலுவலர், வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் ஆகியோர் பாராட்டி வருவதாக இவரே தனக்கு தானே முத்திரை பதித்துக் கொண்டு பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகளிடம் கூறிவருகிறாராம் இதுகுறித்து வட்டாட்சியர் அலுவலகத்தில் நமது நிருபர் குழு விசாரித்தபோது தாசில்தார் என்.சம்பத்தை அனைத்து தரப்பினரும் அவர் நன்றாக பணியாற்றி வருகிறார் உங்கள் ஊரில் வட்டாட்சியர் சம்பத்தை பாராட்டி வருவதாக சொல்கிறாரே அது உண்மையா என்று கேட்டபோது எது கரன்சி கலெக்சன் செய்வதில் என்று நமட்ட சிரிப்புடன் சொல்லுகின்றார் வட்டாட்சியர் அலுவலகத்தை சேர்ந்தவர்கள் நமக்கு கிடைத்த தகவலை எழுதியுள்ளோம். இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர், பாஸ்கர பாண்டியன் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாணியம்பாடி வட்டாட்சியர் உட்பட்ட பகுதி மக்களின் வேண்டுகோளாகும் சரி இனி என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள் என பொறுத்திருந்து பார்ப்போம்? மேலும் தமிழகத்தில் இரண்டு தினங்களுக்கு முன்பு பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு அரசுத் துறைகளில் ஊழல் பாதுகாப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென சோதனை நடத்தி கணக்கில் வராத பல லட்சம் ரூபாய் பணம் வரை கைப்பற்றினர் அதேபோன்று திடீரென வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் விஜிலென்ஸ் போலீசார் சோதனையிட்டால் வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் பல்வேறு பிரிவுகளில் நாள்தோறும் கரன்சி மழையில் நனையும் அதிகாரிகளின் உண்மை வெளிச்சத்திற்கு வந்துவிடும். அத்துடன் அவர்களை கையும் களவுமாக பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி நீதிபதியின் உத்தரவின் பேரில் காப்பு மாட்டி சிறையில் அடைக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
.jpeg)
Comments
Post a Comment