மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது கொடைக்கானல். இது கோடை வாசல் தலமாக மட்டுமில்லாமல் சுற்றுலா பயணிகள் சொர்க்கமாக விளங்குகிறது. அடர்ந்த வனப்பகுதியாக இருந்தாலும் புலிகள் எண்ணிக்கை குறைந்ததால், காட்டு மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. காட்டு மாடுகள் பல்கி பெருகி உள்ளதால் விளைநிலங்கள் தொடர்ந்து நாசப்படுத்தப்பட்டு வருகின்றன.
ஒரு மாடு குறைந்தது 2000 கிலோ இருக்கும் என்பதால் விவசாயிகளால் விரட்ட முடியாமலும், அவற்றை அகற்ற முடியாமலும் திணறி வருகின்றனர். இந்த மாடுகள் அவ்வப்போது நகர் பகுதிக்குள் வருவது வழக்கம். தற்போது சர்வ சாதாரணமாக மாடுகள் வலம் வருகின்றன. மாடுகளை பார்க்கும் பொதுமக்கள் மிரண்டு ஓடும் சூழ்நிலை அதிகரித்துள்ளது. கடந்த வாரம் ஹோட்டல் ஊழியர் ஒருவரை காட்டுமாடு தூக்கி துவசம் செய்தது. இந்த சம்பவத்துக்கு பின்பு, காட்டு மாடுகள் கண்டு பொதுமக்கள் மிரண்டு இன்று காலையில் உகோர்த்தேநகர், மூஞ்சிகல், சீனிவாசபுரம் உட்பட பல இடங்களில் காட்டு மாடுகள் உலா வந்தன. இதை பார்த்த பொதுமக்கள் மிரண்டு ஓடினர்.
செய்தியாளர்: அரியநாயகம்

Comments
Post a Comment