திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்திற்க்குட்பட்ட தடப்பெரும்பாக்கம் ஊராட்சியில் உள்ள மில்லினியம் தெருவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு சில குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர், சாலையில் தேங்கி நிற்பதால் சுகாதாரக் கேடு ஏற்படுவதாக பகுதிவாசிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.மேலும் சாலையில் நடந்து செல்லவும் இருசக்கர வாகனத்தில் செல்லவும் முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.மாணவர்களை பள்ளிக்கு அழைத்து செல்வதும் மிகுந்த சிரமமாக உள்ளது.
அதுமட்டுமல்லாமல் இந்த சாலையில் தினமும் சென்று வருவதால் பொதுமக்கள் சிலர் காய்ச்சலால் அவதிப்பட்டு வருகின்றனர்.டெங்கு போன்ற விஷக்காய்ச்சல் பரவும் அபாயமும் நிலவுவதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.எனவே ஊராட்சி நிர்வாகத்தினர் விரைந்து செயல்பட்டு சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், சாலையில் கழிவுநீரை விடுபவர்கள் மீது கடும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
செய்தியாளர்: சந்திரசேகர்

Comments
Post a Comment