திண்டுக்கல் வேடசந்தூர் அருகே அழகாபுரியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. மாணவ, மாணவிகளை ஆபாச வார்த்தைகள் பேசி கடுமையாக தாக்கியதாக ஜெயந்தி என்ற ஆசிரியை மீது மாணவ மாணவிகள் புகார் தெரிவித்தனர். பெற்றோர்களும் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் மனு அளித்தனர். அதிகாரிகள் ஆசிரியை மீது எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.
இதையடுத்து இன்று காலை ஒன்று கூடிய பெற்றோர்கள் ஆசிரியரை பணி நீக்கம் செய்ய கோரி பள்ளிக்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். பொதுமக்கள் ஒன்று திரண்டு பள்ளிக்கு பூட்டு போட்டதால் கல்வித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர்: அரியநாயகம்

Comments
Post a Comment