திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று காலை கனமழை பெய்தது. அப்போது திடீரென சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இந்த நேரத்தில் திண்டுக்கல் மலைக்கோட்டையை சுற்றி நீர்வீழ்ச்சிகள் ஏற்பட்டன. இதை பார்ப்பதற்கு பரவசமாக இருந்தது. மழை நேரத்தில் மலைக்கோட்டையின் மேல் இருந்த பாறையில் இருந்து கல்லின் ஒரு பகுதி உடைந்து விழுந்தது.
இந்தக் கல் கீழே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது விழுந்தது. காரின் கண்ணாடி உட்பட பல பகுதிகள் உடைந்து நொறுங்கின. இதை எதிர்பார்க்காத பொதுமக்கள் ஆச்சரியப்பட்டனர். திண்டுக்கல் மலைக்கோட்டை வழுக்கு பாறைகளால் ஆனது. இந்தப் பாறை எப்போதும் இடிந்து விழுந்தது இல்லை. உடைந்து விழுந்தது இல்லை. முதல் முறையாக உடைந்து விழுந்து உள்ளதால் பொதுமக்கள் வியப்பாக பார்த்துச் சென்றனர்.
செய்தியாளர்: அரியநாயகம்

Comments
Post a Comment