திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பேரூராட்சிக்குட்பட்ட மணியக்காரன் பட்டி சாலையோரம் உள்ள சுதந்திரபாண்டி என்பவர் தோட்டத்துப்பகுதியில் கட்டிவைக்கபட்ட ஆடு, மாடுகளை இன்று அதிகாலை வாலிபர் ஒருவர் திருட வந்ததாகவும், அப்போது அவரை மடக்கி பிடிக்க முயன்ற விவசாயிகளை தாக்கி கத்தியைக் காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது, அப்போது இருதரப்புக்கும் ஏற்பட்ட கைகளப்பில் கார்கண்ணாடிகளை உடைத்து பொதுமக்கள் அச்சுருத்தி தப்பியோட முயன்றதாக கூறப்படுகிறது,அப்போது அந்த வாலிபரை சுற்றிவளைத்து பிடித்த பொதுமக்கள் மரத்தில் கட்டி வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பொதுமக்களிடமிருந்து வாலிபரை மீட்டு காவல் நிலையம் அழைத்து வந்தனர். போலீசார் விசாரித்ததில் அவர் கேரள மாநிலம் கொள்ளம் பகுதியைச் சேர்ந்த 27-வயதுடைய முகமது பைசல் என்பதும், அவர் மீது பல்வேறு குற்ற வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் தெரியவந்ததுள்ளது. மேலும், நிலக்கோட்டை பகுதியில் இதே போல கடந்த ஒரு மாதமாக பல்வேறு இடங்களில் ஆடு, மாடு கோழிகள் மற்றும் விவசாய மோட்டார் பம்புகள் உபகரணங்கள் பல திருடு போவதாகவும், இதுகுறித்து நிலக்கோட்டை காவல்துறையினர் கண்டு கொள்வதில்லை எனவும் மாவட்ட காவல்துறையினர் தலையிட்டு உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
செய்தியாளர்: அரியநாயகம்

Comments
Post a Comment