திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சயனாவரத்தில் ஐயப்பன் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. அகில பாரத ஐயப்பா சேவா சங்கத்தின் சார்பில் நடைபெற்ற 2ஆம் ஆண்டு திருவிளக்கு பூஜை சயனாவரத்தில் உள்ள காளத்தீஸ்வரர் ஆலயத்தில் தொடங்கியது.அங்கு ஐயப்பனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட பெண்கள் திருவிளக்குகளை கையில் ஏந்தியபடி ஸ்வாமியே சரணம் ஐயப்பா என சரண கோஷம் முழங்க ஊர்வலமாக சென்றனர். விளக்கு பூஜையின் போது நடைபெற்ற வான வேடிக்கை காண்போரை கண்கவர்ந்தது. இந்த திருவிளக்கு பூஜையில் மாதவரம், சயனாவரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஐயப்பனை தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
செய்தியாளர்: சந்திரசேகர்
.jpg)
Comments
Post a Comment