மார்கழி மாத சிறப்பு பூஜை முன்னிட்டு, அதிகாலையில் நத்தத்தில் அருள்மிகு மாரியம்மன் கோவில் அம்மனுக்கு இளநீர், சந்தனம், ஜவ்வாது, மஞ்சள், தேன் போன்ற 16 வகை அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதைப் போன்று கைலாசநாதர் சமேத செண்பகவல்லி கோவில், மீனாட்சிபுரம் காளியம்மன், அசோக் நகர் பகவதி அம்மன் கோயில் ,சந்தன கருப்பு கோவில், தெலுங்கர் தெரு காளியம்மன் கோவில்களிலும், சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி வழிபட்டனர்.
செய்தியாளர்: அரியநாயகம்

Comments
Post a Comment