Skip to main content

மாதவரம் சாலை விபத்தில் வங்கி மேலாளர் உயிரிழப்பு..!

 மாதவரம் அடுத்த விளாங்காடுபாக்கம் நியூ ஸ்டார் சிட்டி அவென்யூ பகுதியை சேர்ந்தவர் விவேக் சுகுமார் (வயது 41). இவர் சென்னை ஆர்.கே சாலையில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வந்தார்.




நேற்று மதியம் தனது பணியை முடித்துவிட்டு ஆக்டிவா இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தார். மாதவரம் சின்ன ரவுண்டானா மஞ்சம்பாக்கம் 200 அடி சாலை அருகே வந்தபோது  தனது 4 வயது  மகளை பள்ளியில் இருந்து அழைத்துச் செல்ல சென்று கொண்டு இருந்தபோது எதிர்பாராத விதமாக அதே திசையில் இவருக்கு பின்னால் வந்த டிப்பர் லாரி இவரின் மீது  மோதியதில் தூக்கி எறியப்பட்டார். இதில் அவரது தலை, இடுப்பு பகுதிகளும் கை, கால்களிலும் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். 



தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போக்குவரத்து புலனாய்வு பிரிவு உதவி ஆய்வாளர் அக்பர் பாஷா, தலைமை காவலர் சீனிவாசன் ஆகியோர் அவரை காப்பாற்ற உடனே  108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு சுமார் 8 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு ஆய்வாளர் அகமது அப்துல் காதர்  வழக்கு பதிவு செய்து இந்த விபத்துக்கு காரணமான லாரி டிரைவர் துரைப்பாக்கத்தைச் சேர்ந்த சீனிவாசன் ( வயது 30) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.


செய்தியாளர்: அகமது அலி 

Comments