தமிழ்நாடு செய்தித்துறையினர் யூனியன் சார்பில் ஆலோசனைக் கூட்டம், கொளத்தூர் குமரன் நகர் குடியிருப்போர் நன்னல சங்க கட்டிடத்தில் மாநிலத் தலைவர் மக்கள் காவலர் செய்தி ஸ்ரீதர் தலைமையில், சங்க பொதுச் செயலாளர் கொளத்தூர் நண்பன் சத்யா முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் நடைபெறவுள்ள இலவச மருத்துவ முகாம் குறித்தும், இதில் கலந்து கொள்ள இருக்கின்ற காவல் துறை அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் ஆகியோர்களை அழைப்பது பற்றியும், சிறப்பாக செயல்பட்ட சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு நினைவு பரிசு கேடயம் வழங்குவது குறித்தும், மேலும் அடுத்த ஆண்டுக்கான மாநில மாவட்ட நிர்வாகிகள் செயல்பாடுகள் பற்றியும், உறுப்பினர்கள் சேர்க்கை பற்றியும் விவாதிக்கப்பட்டது..
இந்நிகழ்வில் மாநில துணைத் தலைவர் மாலை முரசு அகமதுஅலி, மாநில இணைச்செயலாளர் காகித பூ கார்த்திக், மாநில அமைப்பு செயலாளர் அரசு மலர் பாலமுருகன், மாநில செய்தித்தொடர்பாளர் அரசியல் அரிச்சுவடி லோகேஷ், சங்க சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் தினகரன், காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பாளர் மதன் கோபால், தென் சென்னை மாவட்ட செயலாளர் செல்வா, வடசென்னை மாவட்ட செயலாளர் ராஜேஷ், சங்க அலுவலக செயலாளர் சக்திமாரியப்பன், யமுனா, சமூக சேவகி டாக்டர் சைதா ஜெபின், தூர்தர்சன் தொலைக்காட்சி கோவிந்தராஜன், சிவா, வினோத் மாரி, பன்னிர் ஆறுமுகம், தேவி, ஐஸ்வர்யா, பத்மஸ்ரீ, டெனிஸ் , உள்ளிட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.







Comments
Post a Comment