திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அண்ணா நகர் பகுதியில் உள்ள முத்துக்குமார் என்பவரது வீட்டில் நல்ல பாம்பு இருப்பதைக் கண்டு, நத்தம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற நத்தம் தீயணைப்பு நிலைய அலுவலர் திருக்கோல்நாதர் மற்றும் சித்திரக்குமார், நவநீதகிருஷ்ணன், சேகர், மனோஜ், முத்து கண்ணன், வீரர்கள் குழுவினர் வீட்டு பின்புறம் செங்கல்கள் அடுக்கி இருந்த பகுதிகளில் பதுங்கியிருந்த 4அடி நீளமுள்ள நல்ல பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் அந்த பாம்பு நத்தம் வனத்துறையினரிடம் ஒப்படைக்கபட்டு வனப்பகுதிக்குள் விடப்பட்டது.
செய்தியாளர்: அரியநாயகம்

Comments
Post a Comment