பழனி திருநகரை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி கனகா. செவிலியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர்கள் 2 பேரும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றுவிட்டனர். நேற்று நள்ளிரவு இவர்களது வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் சிலர் உள்ளே புகுந்தனர்.
பீரோவை திறந்து பார்த்தபோது அதில் நகை-பணம் எதுவும் கிடைக்கவில்லை. ஏமாற்றம் அடைந்த அவர்கள் வீட்டிற்குள் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளில் பெட்ரோலை ஒரு கேனில் பிடித்து சென்றனர். இன்று வீட்டிற்கு திரும்பிய சந்திரசேகரன் மர்மநபர்கள் பூட்டைஉடைத்து உள்ளே நுழைந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். போலீசில் புகார் அளித்தார். சிசிடிவி காமிராபதிவுகளை வைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இவர் தனது வீடடில் நகை-பணம் எதுவும் வைத்திருக்கவில்லை. பூட்டியிருக்கும் வீடுகளை குறிவைத்து கொள்ளையர்கள் ஈடுபடுவது தெரியவந்துள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர்: அரியநாயகம்

Comments
Post a Comment