நிலக்கோட்டை அருகேயுள்ள வைகையாற்றில் இரவுபகலாக தொடர்ந்து மணல் கொள்ளையர்களால், மணல் கொள்ளையடிக்கப்பட்டு பல ஆயிரங்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்கள் வாகனத்தை மறித்து ஏன் மணலை அள்ளுகிறீர்கள் என்று கேள்வி கேட்டால் பொதுமக்களை, மணல் கொள்ளையர்கள் மிரட்டி வருகின்றனர். மாவட்டம் முழுவதும் இதுவரை 4 க்கு மேற்பட்டவர்கள் மணல் கொள்ளையர்களின் வாகனங்களில் சிக்கி இறந்துள்ளனர்.
மாவட்ட அதிகாரிகளும் மணல் கொள்ளையர்களுக்கு ஆதரவாக செயல்படுவது திண்டுக்கல் மாவட்ட மக்களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் தற்போது 24மணி நேரமும் மணல் கொள்ளையால் ஆறு, குளம், கண்மாய் மணல் காணாமல் போய்யுள்ளது. கொள்ளையர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்குமா என எதிர்பார்த்து பொதுமக்கள் காத்திருக்கின்றனர்.
செய்தியாளர்: அரியநாயகம்


Comments
Post a Comment