திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சிக்குட்பட்ட ஜீவா தெருவை சேர்ந்த தேவன் என்பவரது மகன் திவாகர் என்ற தமிழன் வயது 33. இவர் பொன்னேரி நகர திமுக இளைஞரணி அமைப்பாளராக பொறுப்பு வகித்து வந்தார். தனியார் நிறுவனம் ஒன்றின் குளிர்சாதனப்பெட்டிகள் சர்வீஸ் சென்டர் வைத்திருந்தார்.
நேற்று இரவு இவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.இந்த சம்பவம் பொன்னேரி நகர திமுகவினரிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்: சந்திரசேகர்

Comments
Post a Comment