ஒட்டன்சத்திரம் நகராட்சியில் 38 வார்டுகள் உள்ளன. 38 வார்டுகளிலும் சேர்ந்து குப்பைகள் சேகரிக்கப்பட்டு கொட்டுவதற்கு இடம் இல்லாததால் ஆங்காங்கு ரோடுகள் மற்றும் குளங்களின் ஓரங்களில் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் குப்பை கொட்டுவதற்கு தனியாக இடம் வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து உள்ளது. இந்நிலையில் நகராட்சி நிர்வாகம் துப்புரவு பணியாளர்களுக்கு வாங்கிய வாகனங்களை இன்னும் வழங்காததால் துப்புரவு தொழிலாளர்கள் கையில் குப்பைகளை அள்ளுகின்றனர். வீதிகள் தோறும் குப்பைகளை கையில் வாங்கி, சாக்கில் தூக்கிச் செல்லும் அவலம் தொடர்ந்து நடந்து வருகிறது.
வயிற்றுப் பிழைப்பிற்காக வேலைக்கு வரும் துப்புரவு பணியாளர்களை பழிவாங்கும் நோக்கத்தில் இது செயல்படுவதாக உள்ளது. அரசு வாகனம் வாங்கி கொடுத்தும் அதை பயன்படுத்தாமல் அப்பாவி தொழிலாளர்களையே குப்பையை சுமக்க விடுகின்றனர். குப்பைகளை கையில் வாங்கி சாக்கு சுமக்கும் கொடுமை தொடர்ந்து நடந்து வருகிறது. ஈவு இரக்கம் இல்லா நகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
செய்தியாளர்: அரியநாயகம்

Comments
Post a Comment