திண்டுக்கல்லில் மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ஈசன் படியளக்கும் நாள் திருவிழா நடந்தது. திண்டுக்கலில் ஸ்ரீபத்மகிரியார் அபிராமி அம்மன் மற்றும் உப தெய்வங்களுடன் அஷ்டமி சப்ரத்தில் நகர்வலம் சென்று படியளக்கும் வைபவம் நடந்தது. அப்போது கோயிலில் இருந்த பக்தர்கள் ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க என திருமந்திரம் பாடி எழுச்சி கொண்டனர். ஈ எறும்பு என அனைத்து ஜீவ ராசிகளுக்கும் படியளக்கும் வைபவம் தொடர்ந்து நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
செய்தியாளர்: அரியநாயகம்

Comments
Post a Comment