திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து போதைப் பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், அதிரடி சோதனை நடத்தி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அனைத்து வாகனங்களும் பிடிக்கப்பட்டு சோதனை செய்யப்படுகிறது. இந்நிலையில் போலீசார் சோதனைச் சாவடிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதே சமயத்தில் நகர் பகுதிகளில் ஆன் லைன் சூதாட்டம் நடப்பது குறித்து போலீசார், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். லாட்டரி விற்பவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டனர். சைபர் கிரைம் போலீசார் மூலம் ஆன்லைனில் லாட்டரிகள் விற்பவர்கள் தேடப்பட்டு வந்தனர். இந்நிலையில் திண்டுக்கல் YMR.பட்டி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த விக்டர்(40) என்பவரை, நகர் வடக்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சித்திக் மற்றும் காவலர்கள் கைது செய்து விசாரணை செய்கிறார்கள்.
செய்தியாளர்: அரியநாயகம்

Comments
Post a Comment