திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து நேற்று இரவு முழுவதும் நல்ல மழை பெய்தது. இன்று அதிகாலை காலையிலும் மழை பெய்து கொண்டே இருந்தது. சிறுமலையில் பெய்த கன மழையால் ஆங்காங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் ராஜகபட்டியில் உள்ள பெரியகுளம் நிரம்பியது. இந்த குளம் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தாலும், செக் டேம் அமைக்காததால் தண்ணீர் அணைத்தும் வீணாகி வருகிறது. விவசாய நிலங்களை அடித்துச் செல்கிறது. பலமுறை தடுப்பணை கட்ட சொல்லியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விவசாயிகள் தொடர்ந்து நஷ்டம் அடைந்து வருகின்றனர். உடனடியாக தடுப்பணை கட்ட வேண்டுமென சமூக ஆர்வலர்களும், விவசாய குடிமக்களும் வேதனை தெரிவித்துள்ளனர்.
செய்தியாளர்: அரியநாயகம்

Comments
Post a Comment