திண்டுக்கல், சிறுமலையில் தென்மலை அருகே கண்ணுகுட்டி பாறை பகுதியில் சந்தன மரங்களை வெட்டி பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த பகுதியில் சோதனை செய்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி(39) என்பவரை சிறுமலை வனத்துறையினர் கைது செய்தனர். அவரிடமிருந்து 10கிலோ சந்தன கட்டைகள், நாட்டுத் துப்பாக்கி ஏர்கன் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை செய்கிறார்கள். சிறுமலையில் சந்தன கட்டைகளை கடத்துவது தொடர்ந்து நடந்து வருவது வனத்துறையினரை வேதனையடைய செய்துள்ளது. வனப்பகுதியில் தீவிர ரோந்துக்கு வனத்துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
செய்தியாளர்: அரியநாயகம்

Comments
Post a Comment