சென்னை அடுத்த மாதவரம் பால் பண்ணை மஞ்சம்பாக்கத்தில் எல்லையம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் பல தலைமுறைகளாக 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் சாமி கும்பிட்டு வருகின்றனர். இந்த கோயிலை கிராம நிர்வாகித்தனர் நிர்வகித்து வந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்து அறநிலைத்துறையினர் வந்து, இந்த கோயிலை இந்து அறநிலைத்துறையிடம் சேர்க்க நடவடிக்கை மேற்கொண்டனர். இதை எதிர்த்து பொதுமக்கள் அப்போது சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்பொழுது நடவடிக்கை கைவிடப்பட்டது, இந்த நிலையில் நேற்று இந்து அறநிலைத்துறையினர் கோயில் வாசலில் அறநிலையத்துறையினரிடம் கோயிலை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என நோட்டீஸ் ஒட்டினர்.
இது பொதுமக்களிடையே காட்டுத்தீபோல் பரவியது. இதையடுத்து நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் உட்பட கோயில் நிர்வாகிகள் என 200க்கும் மேற்பட்டோர் கோவில் முன்பு கூடி முற்றுகை போராட்டம் நடத்தினர். இதையடுத்து அங்கு ஒட்டப்பட்டிருந்த நோட்டீஸ் அகற்றப்பட்டது. பால்பண்ணை இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் முற்றுகையிட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறியதால் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
செய்தியாளர்: அகமது அலி


Comments
Post a Comment