திண்டுக்கல் தொடர் மழை காரணமாக வேடசந்தூர் குடகனாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் கரையோரம் இருக்கும் மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்நிலைய எல்லைக்குட்பட்ட சத்திரப்பட்டி, ஆத்துப்பாலம் என்ற இடத்தில் முனியப்பன் என்பவருக்கு சொந்தமான பசுமாடு ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்டது. 60 அடி ஆழம் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தது. உடன் பணியாளர்கள் கயிறு மூலம் உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தை பொதுமக்கள் இருகரைகளில் இருந்து வேடிக்கை பார்த்து ஆரவாரம் செய்தனர். இதையடுத்து பொதுமக்கள் நிலைய அலுவலர் அ.ஜேம்ஸ் தலைமையிலான தீயணைப்பு வீரர்களை பாராட்டினர்.
செய்தியாளர்: அரியநாயகம்
.jpg)

Comments
Post a Comment