கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் முழுவதும் 5001 தீபம் ஏற்றப்பட்டது. இதற்காக ஏராளமான பக்தர்கள் கோட்டை மாரியம்மன் கோவிலில் காலையிலிருந்து பணிகளில் ஈடுபட்டனர். திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்பட்டது. அதே சமயத்தில் கோட்டை மாரியம்மன் கோவிலில் அனைத்து பகுதிகளிலும் விளக்கு ஏற்றப்பட்டன. பரம்பரை அறங்காவலர் சுபாஷினி தலைமையிலான குழுவினர் தீபம் ஏற்றும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். அம்மனுக்கு சிறப்பு பூஜை வழிபாடு நடத்தப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாத வழங்கப்பட்டது.
செய்தியாளர்: அரியநாயகம்

Comments
Post a Comment