திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அடுத்த காந்திநகரில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த சிறிய ரக சரக்கு வாகனம் ஒன்று போலீசாரை கண்டதும் நின்றது. வாகனத்தை நிறுத்தி விட்டு அதிலிருந்த ஓட்டுநர் தப்பி ஓட்டம் பிடித்தார்.
போலீசார் அந்த வாகனத்தை சோதனை மேற்கொண்டதில் தமிழக அரசால் வழங்கப்படும் விலையில்லா ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 3டன் ரேஷன் அரிசி, வாகனத்துடன் பறிமுதல் செய்யப்பட்டது. குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து ரேசன் அரிசியை கடத்த முயன்ற ஓட்டுநர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர்: சந்திரசேகர்

Comments
Post a Comment