குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை இயக்குநர் திரு. அபாஷ் குமார் IPS அவர்களின் உத்தரவின் படி, வெளி மாநிலத்திற்கு ரேசன் அரிசி கடத்தபடுவதை தடுக்கும் பொருட்டு கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் திரு.பாலாஜி அவர்களின் மேற்பார்வையில்,ஈரோடு காவல் துணை கண்காணிப்பாளர் திரு.சுரேஷ் குமார் அவர்கள் தலைமையில், காவல் ஆய்வாளர் திருமதி .சாந்தி, சார்பு ஆய்வாளர்கள் திரு.கார்த்தி, திரு.இசக்கி மற்றும் காவலர்கள் திரு.ரமேஷ் , திரு .சிவக்குமார், திரு.ரமேஷ், திரு.பத்மநாதன் ஆகிய போலீஸ் பார்டியினருடன் வெள்ளகோவில் to காங்கேயம் நெடுஞ்சாலை ஓலப்பாளையம் ஜங்சன் அருகே வாகன தணிக்கை செய்ததில் அந்த வழியாக வந்த TN 70 J 3250 என்ற டாரஷ் லாரியை நிறுத்தி சோதனை செய்த போது மேற்படி வாகனத்தில் தமிழக அரசால் இலவசமாக வழங்கப்படும் ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கபட்டது. ஒட்டுநரிடம் விசாரித்த போது தஞ்சாவூர், கும்பகோணத்தை சேர்ந்த சதீஷ்குமார்(31) S/o குணசேகரன் என தெரியவந்தது.
மேற்படி நபரை விசாரணை செய்த போது அதில் 20 டன் ரேசன் அரிசி இருந்தது தெரியவந்தது. மேற்படி ரேசன் அரிசி எங்கிருந்து வந்தது என்று விசாரிக்க தஞ்சாவூர்,கும்பகோணத்தை சேர்ந்த வினோத் என்பவர் கேரளா கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்க கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குறைந்த விலைக்கு வாங்கி அதை கேரளா மாநிலத்திற்கு அனுப்பி வைத்தது தெரியவந்தது. ஓட்டுனர் கைது செய்து செய்யப்பட்டார். அரிசி மற்றும் லாரி உரிமையாளரை, திருப்பூர் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வருகின்றனர்.
Dr. R. வெற்றிவேல்முருகன்
9384271066

Comments
Post a Comment