செங்குன்றம் அடுத்த கிராண்ட் லைன் செல்வ விநாயகர் கோவில் தெருவில் அரசால் தடை செய்யப்பட்ட ஜர்தா, மாவா போன்ற போதை தரும் பாக்குகளை தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக, செங்குன்றம் காவல் ஆய்வாளர் ரமேஷுக்கு ரகசிய தகவல் வந்ததின்தின்படி , அங்கு விரைந்த ஆய்வாளர் ரமேஷ், கிருஷ்ணா, மகேஷ், மோகன் கிருஷ்ணமூர்த்தி, மருதுபாண்டியர், ராஜா, ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் தெருவில் உள்ள வீட்டை சோதனை செய்தபோது அங்கு 100 கிலோ ஜர்தாவையும் புகையிலை பொருட்களை அரைக்கும் நான்கு கிரைண்டர்கள், மிக்ஸி உட்பட பொருட்ககளை பறிமுதல் செய்து, அங்கிருந்த லோகேஷ் (வயது 24) விஜய் பகதூர் ( வயது 24) ஆகிய இருவரை கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டதில், இவர்கள் இந்த போதை பொருட்களை வடமாநிலங்களில் இருந்து கடத்தி வந்து அவற்றை சிறிய பாக்கெட்டுகளில் அடைத்து சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் விற்பனை செய்வதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து செங்குன்றம் காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ் இவர்கள் இருவரையும் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.
செய்தியாளர்: அகமது அலி

Comments
Post a Comment