திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு திறனூக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி ஏஐசிடியி-ன் வழிகாட்டுதலின்படி நடைபெறும் இந்த பத்தாம் நாள் நிகழ்ச்சியின் துவக்க விழா கல்லூரி அரங்கில் நடைபெற்றது. கல்லூரியின் தலைவர் தனலட்சுமி மற்றும் கல்லூரியின் முதன்மை தலைவர் ஆர்.எஸ்.கே. ரகுராம் ஆகியோர் தலைமை தாங்கினர். நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக வைகை கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் தலைவர் நீதி மோகன் தொடக்க உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் கோபிநாத் கலந்து கொண்டு மாணவ, மாணவியுடன் கலந்துரையாடினார். கல்லூரியின் முதல்வர் வாசுதேவன் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். வரும் 17ஆம் தேதி வரை நடக்கும் இந்நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் பேச்சாளர்கள் பர்வீன் சுல்தானா, கலியமூர்த்தி ஐபிஎஸ் போன்ற பல்வேறு பிரபலங்கள் கலந்து கொள்வர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்: அரியநாயகம்

Comments
Post a Comment