கிருஷ்ணகிரி மாவட்டம், காட்டாகரம் ஊராட்சி குட்டபட்டி கிராமத்தில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இந்த ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளைப்பாறையூர், வேடர்தட்டக்கல், காட்டாகரம், சந்தூர், குட்டபட்டி, பட்டகப்பட்டி. மற்றும் கெங்காவரம் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டு 28.10.22 அன்று பள்ளியில் நடைபெற்ற பள்ளி மேலாண்மைக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை கிராம சபையில் வாசித்து காட்டினார்கள்.
மேலும் பள்ளி கோரிக்கை அடங்கிய தீர்மான நகலை காட்டாகரம் ஊராட்சி மன்ற தலைவர் திரு.G.S. ரங்கநாதன் அவர்களிடம் வழங்கினார்கள். இக்கூட்டத்தில் பர்கூர் வட்டார வள மையம் ஐகுந்தம் குறு வள மைய ஆசிரியர் பயிற்றுனர் திரு. சிவசந்திரன், சந்தூர் குறு வள மைய ஆசிரியர் பயிற்றுனர் திரு. தங்கராசு ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்கள் உடல் நலம், சிறப்பாக நடைபெற்று வரும் இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் மாணவர்களை தொடர்ந்து அனுப்புதல், இடை நின்ற மாணவர்கள் இல்லாமல் இருத்தல், உயர் கல்வி பயில்வோர், பயிலாதவர்கள் பற்றி கலந்துரையாடினார்கள்.

Comments
Post a Comment